Tuesday, September 21, 2010

முட்டாளான அறிவாளி

ஆயிரம் இலக்கண இலக்கியங்கள் படித்த அறிவாளியானாலும்,
அவளின் விழிகள் பேசும் மொழிகளை புரிந்துக்கொள்ளதவரை
அவன் முட்டாலே...!

Monday, September 20, 2010

பார்க்காமலிந்தால் விழாமலிருந்திருப்பேன்




நடந்து செல்லும் பொழுதுகளில்
கீழே விழுந்துவிடாத படிக்கு
பார்த்து செல்ல சொல்வாள் தாய்,
பார்க்காமல் சென்றால் கூட விழுந்திருக்க
மாட்டேன். ஆனால், விழுந்துவிட்டேன்
பள்ளத்திலல்லாமல்  உள்ளத்தில்

பொதுவான வலி காதல்

நான் கிறுக்கிய வரிகளைஎல்லாம் யாரோ
எழுதியதுப்போல் இருகிறதுஎன்கிறார்கள் அது,
என்  தவறு கிடையாது ஏனென்றால் நான் கிறுக்கியது
காதலின் வலியை அது பொதுவாகத்தான் இருக்கும்..........

காதலனை காணாத கண்களில்


இங்கே ஓடுவது தண்ணீர் அல்ல
அவன்எனக்காக சிந்திய கண்ணீர்,
அவன் கண்களில் தான் என்னை பார்க்க முடியவில்லை
அவன் கண்ணீரிலாவது என்னை நான் பார்த்துக்கொள்கிறேன்

அவள் பேசாத பொழுதுகளில்


என்னிடம் முறைத்துக் கொண்டு
அவள் பேசாத பொழுதுகளில்,,
என் உள்ளம் கவலை கொண்டதேயில்லை..
அவள் விழிகள் தொடர்ந்து ஆயிரம்  ஆயிரம்
சொற்களை என்னிடம் பேசிக் கொண்டுதானிருக்கும்